February 23, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தம்புள்ள கல்வி வலயத்திலுள்ள பாடசாலைகளை மூடுவதற்கு தீர்மானம்

தம்புள்ள கல்வி வலயத்திற்கு உட்பட்ட அனைத்து பாடசாலைகளையும்  நாளை முதல் ஒரு வார காலத்திற்கு மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தம்புள்ள பிரதேசத்தில் கொரோனா தொற்றாளர்கள் பலர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், பலர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் அவர்களின் பிள்ளைகள் பாடசாலைக்கு செல்வதற்கான வாய்ப்பு உள்ளதால் இந்த தீர்மானம் பிரதேசத்தில் உள்ள பாடசாலைகளை மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக தம்புள்ள நகர சபை தலைவர் தெரிவித்துள்ளார்.

ஒரு வார காலத்திற்கு இவ்வாறாக பாடசாலைகளை மூடுவதற்கு நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த 23 ஆம் திகதி முதல் மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்கள் தவிர்ந்த மற்றைய இடங்களில் பாடசாலைகளை திறப்பதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கையெடுக்கப்பட்டது.

ஆனபோதும் கொரோனா தொற்று அச்சம் காரணமாக கிளிநொச்சி மாவட்டம், கண்டி நகரம், கல்முனை ஆகிய இடங்களில் பாடசாலைகள் மீண்டும் மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.