January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

யாழ். நல்லூரில் “சிவகுரு” ஆதீனம் உதயம்!

யாழ்ப்பாணம் நல்லூரில் “சிவகுரு” என்ற புதியதோர் ஆதீனம் உதயமானது. திருக்கார்த்திகைத் தினமான இன்று நல்லைக் கந்தனின் மணி ஒலிக்கும் நேரத்தில் சிவகுரு ஆச்சிரமம் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.

நல்லூர் கந்தன் ஆலய வழிபாட்டை அடுத்து கோமாதா வழிபாட்டுடன் சிவகுரு ஆதீன முதல்வர் தவதிரு வேலன் சுவாமிகளால் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

புதிய ஆதீனமானது ஞானத்தைப் போதிக்கும் மடமாகவும், தமிழே அறிவாகவும், அரனே வடிவாகவும் உதயமாகியுள்ளது.

அத்துடன் அண்ணாமலையான் சோதி வடிவமாக காட்சி தரும் நன்நாளில் நிலமெங்கும் ஆன்மீக ஒளித்திரளாய் அமைகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

This slideshow requires JavaScript.