இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி மேலும் இரண்டு பேர் இன்று உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 109ஆக அதிகரித்துள்ளது.
கொழும்பு 2 பகுதியைச் சேர்ந்த 76 வயது ஆண் மற்றும் கொழும்பு 8 பகுதியைச் சேர்ந்த 96 வயது பெண் ஆகியோரே இன்று மரணமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்,213 பேருக்கு கொரோனா தொற்று இன்றைய தினம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த அனைவரும் நோயாளர்கள் உடன் நெருங்கிப் பழகியவர்கள் என இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில் இன்றைய தினம் இதுவரையில் 487 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய மினுவங்கொடை மற்றும் பேலியகொடை கொத்தணியில் கொவிட் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 19,450 ஆக அதிகரித்துள்ளது.