January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘இலங்கையில் கொரோனா துணைக் கொத்தணிகள் உருவாகும் ஆபத்து’

இலங்கையில் கொரோனா துணைக் கொத்தணிகள் உருவாகும் ஆபத்து இருப்பதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கொரோனா தொற்றாளர்கள் புதிதாக அடையாளம் காணப்படும் பிரதேசங்களில் பொது மக்கள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்கு தாமதமின்றி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.

கொவிட்- 19 தொற்று கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட பிரதேசங்களில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவல் தீவிரமடைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பு நகரில் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ளதால், கொவிட்- 19 கட்டுப்பாட்டு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள பொது சுகாதார பரிசோதகர்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கொரோனா பரவல் அவதானமுள்ள பிரதேசங்களில் பொது மக்கள் நடமாட்டம் மற்றும் போக்குவரத்து என்பவற்றைக் கட்டுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.