வெளிநாடுகளில் இருந்து நாட்டுக்குத் திரும்ப எதிர்பார்க்கும் இலங்கையர்களை அழைத்துவரும் செயற்பாடு துரிதப்படுத்தப்படவுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
நாளொன்றுக்கு 500 இலங்கையர்களை அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையர்களை அழைத்துவரும் செயற்பாடு மீண்டும் ஆரம்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தற்போது நாளாந்தம் 300 பேரளவில் நாட்டுக்கு அழைத்துவரப்படுகின்றனர்.
அத்தோடு, இன்று மேலும் 191 இலங்கையர்கள் வெளிநாடுகளிலிருந்து நாட்டிற்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.
இவர்கள் அனைவருக்கும் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட பின்னர் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.