நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த பஸ் போக்குவரத்துக்கள் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் வழமைக்குத் திரும்பும் என்று இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.
பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், பஸ் பற்றாக்குறை காரணமாக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் எதிர்நோக்கும் போக்குவரத்து பிரச்சினைகளை கருத்தில் கொண்டே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ்களில் பயணிக்கும் போது கொரோனா தொற்றுக்கு உள்ளாகும் பயணிகளுக்கு இழப்பீடு வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.