July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘கிழக்கு மாகாண தொல்பொருள் செயலணியில் சகல இனத்தவர்களுக்கும் பிரதிநிதித்துவம் வேண்டும்’

இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் தொல்பொருள் முக்கியத்துவமிக்க பிரதேசங்களைப் பாதுகாப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி செயலணியில் சகல இனத்தவர்களுக்கும் பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும் என்று ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் செறிந்து வாழும் கிழக்கு மாகாணத்தில் உள்ள தொல்பொருள் இடங்களைப் பாதுகாப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி செயலணியில் தமிழ், முஸ்லிம் பிரதிநிதிகள் உள்வாங்கப்படாமை குறித்து கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஒரு இனத்தை மாத்திரம் பிரதிநிதித்துவப்படுத்தி, நியமிக்கப்பட்டுள்ள பிரதிநிதிகளால் நியாயத்தை எதிர்பார்க்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நாடு பூராகவும் தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் இருக்கும் போது, கிழக்கு மாகாணத்துக்கு மாத்திரம் கவனம் செலுத்தப்பட்டுள்ளமை குறித்து ஹக்கீம் கேள்வி எழுப்பியுள்ளார்.

தேர்தல் ஆணைக்குழு உட்பட ஜனாதிபதியால் நியமிக்கப்படும் ஆணைக்குழுக்களில் பெண்கள் பிரதிநிதித்துவமும் பாதுகாக்கப்பட வேண்டுமென்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.