January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் 600 கைதிகளுக்கு ஜனாதிபதியினால் ‘பொது மன்னிப்பு’

இலங்கையில் சிறு குற்றங்களுக்காக சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 600 கைதிகளுக்கு ஜனாதிபதி ‘பொது மன்னிப்பு’ வழங்கவுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் துஷார உபுல்தெனிய தெரிவித்துள்ளார்.

சிறைச்சாலைகளில் கொரோனா வைரஸ் பரவல் தீவிரமடைந்துள்ள நிலையைக் கருத்திற்கொண்டு, சிறைச்சாலைகளிலிருந்து கைதிளைக் குறைக்கும் நோக்கிலேயே இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு சிறு குற்றங்களுக்காக  சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைக்கைதிகளை அடையாளங்கண்டு, அவர்களது பெயர்ப் பட்டியலை உடனடியாக அனுப்புமாறு சிறைச்சாலைகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் சிறைச்சாலைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

குறித்த பெயர்ப் பட்டியல் கிடைத்தவுடன் பொது மன்னிப்பு வழங்க ஜனாதிபதி நடவடிக்கை எடுப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெலிக்கடை, கொழும்பு மெகசின், கொழும்பு ரிமாண்ட், மஹர, குருவிட்ட மற்றும் பழைய போகம்பறை சிறைச்சாலைகளிலிருந்து கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.