
இலங்கையில் மேலும் 8 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.
அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 107 ஆக அதிகரித்துள்ளது.
கொழும்பு 13 மற்றும் மாளிகாவத்த பகுதிகளை சேர்ந்த 87 மற்றும் 58 வயதுடைய பெண்களும், கொழும்பு 9 மற்றும் மருதானை பகுதிகளை சேர்ந்த 54 மற்றும் 78 வயதுடைய பெண்களும் உயிரிழந்துள்ளனர்.
அத்துடன் கொழும்பு 15, கொழும்பு 2 மற்றும் கொழும்பு 13 பகுதிகளை சேர்ந்த 36, 83 மற்றும் 69 வயதுடைய ஆண்களும், கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் 70 வயது கைதி ஒருவரும் பலியானவர்களில் அடங்குகின்றனர்.
இதன்படி, மேலும் 221 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றும் குறித்த அனைவரும் நோயாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என்றும் இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதற்கமைய மினுவங்கொடை மற்றும் பேலியகொடை கொத்தணியில் கொவிட் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 18,963 ஆக அதிகரித்துள்ளது.