May 5, 2025 19:59:58

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மன்னாரில் மாவீரர் நினைவேந்தல்

மன்னாரில் பிரத்தியேகமான இடம் ஒன்றில் இன்று மாலை மாவீரர் நினைவேந்தல் இடம் பெற்றது.
இந்த நிகழ்வு  மன்னார் மாவட்ட நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழுவின் தலைமையில் இடம் பெற்றது.
இதன் போது மாலை 6.05 மணியளவில் தீபம் ஏற்றப்பட்டு உயிர் நீத்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
குறித்த நினைவேந்தல் நிகழ்வில் மன்னார் மாவட்ட நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழு பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டிருந்தனர்.
மன்னார் மாவட்டத்தில் பொது இடங்களில் மாவீரர் நினைவேந்தல் நடத்துவதற்கு நீதிமன்றம் தடை விதித்த நிலையில், பிரத்தியேக இடம் ஒன்றில் சுகாதார நடைமுறைகளுக்கு அமைவாக  இந்த நினைவேந்தல் இடம்பெற்றது  குறிப்பிடத்தக்கது.