November 24, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சிறையில் இருந்து விடுதலையாவோரை 14 நாட்களுக்கு தனிமைப்படுத்த நடவடிக்கை

கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்படும் சிறைச்சாலைகளிலிருந்து விடுதலை செய்யப்படுபவர்களை 14 நாட்களுக்கு தனிமைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை நிர்வாக ஆணையாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

தனிமைப்படுத்தல் காலத்தை நிறைவு செய்த பின்னர் தொற்று இல்லை என்று உறுதி செய்யப்பட்டால் அவர்களை வீடுகளுக்கு அனுப்ப நடவடிக்கையெடுக்கப்படும் என்று சிறைச்சாலை நிர்வாக ஆணையாளர்தெரிவித்துள்ளார்.

விடுதலை செய்யப்படும் கைதிகள் பிசிஆர் பரிசோதனைகளின் பின்னர் தனிமைப்படுத்தலுக்காக பல்லேகல மற்றும் வீரவிலவில் உள்ள சிறைச்சாலைகளுக்கு அனுப்பப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுவரை வெலிக்கடை, கொழும்பு மெகசின், கொழும்பு விளக்கமறியல், மஹர, குருவிட்ட மற்றும் பழைய போகம்பறை சிறைச்சாலைகளில் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.