May 24, 2025 22:21:01

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வடமராட்சி தெற்கு – மேற்கு பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றம்

வடமராட்சி தெற்கு-மேற்கு (கரவெட்டி) பிரதேச சபையின் 2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இரண்டு மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த வரவு செலவுத் திட்டம் இன்று முற்பகல் 10 மணிக்கு தவிசாளர் தங்கவேலாயுதம் ஐங்கரனால் சபையில் முன்வைக்கப்பட்டது.

இதையடுத்து இடம்பெற்ற வரவுசெலவுத் திட்டத்தின் மீதான வாக்கெடுப்பில், வரவு செலவுத்திட்டத்துக்கு ஆதரவாக 16 வாக்குகளும் எதிராக 14 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 8 உறுப்பினர்களும் ஈ.பி.டி.பியின் 3 உறுப்பினர்களும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் 3 உறுப்பினர்களும் ஐக்கிய தேசியக் கட்சியின் 2 உறுப்பினர்களும் என 16 உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்திருந்ததுடன் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 7 உறுப்பினர்களும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் 7 உறுப்பினர்களும் எதிராக வாக்களித்திருந்தனர்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் ஒருவர் சபைக்கு சமூகமளிக்கவில்லை.