இலங்கையில் மேலும் 3 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.
அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 99 ஆக அதிகரித்துள்ளது.
80 மற்றும் 87 வயதுடைய ஆண்கள் இருவர் மற்றும் 73 வயதுடைய பெண் ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
மேலும், வியாழக்கிழமை மாலை வரையில் 211 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த அனைவரும் பேலியகொடை நோயாளர்கள் உடன் நெருங்கிப் பழகியவர்கள் என இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதற்கமைய மினுவங்கொடை மற்றும் பேலியகொடை கொத்தணியில் கொவிட் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 18,491 ஆக அதிகரித்துள்ளது.