January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பெண்களுக்கு எதிரான வன்முறைகள்; செம்மஞ்சள் நிறத்தில் ஒளிரும் தாமரைக் கோபுரம்

கொரோனா காரணமாக முடங்கியுள்ள பெண்கள் மற்றும் சிறுமிகள் அனுபவிக்கும் வன்முறைகளைக் கருத்திற்கொண்டு,  அதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் கொழும்பு தாமரைக் கோபுரம் 16 நாட்களுக்கு செம்மஞ்சள் நிறத்தில் ஒளிரவிடப்படவுள்ளதாக இலங்கை ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியம் தெரிவித்துள்ளது.

பெண்களுக்கு எதிரான வன்முறைகள் மற்றும் மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு நேற்று இந்த நடைமுறை ஆரம்பிக்கப்பட்டுள்ளதோடு, தொடர்ந்தும் 16 நாட்களுக்கு செம்மஞ்சல் நிறத்தில் தாமரைக் கோபுரம் ஒளிரவிடப்படவுள்ளதாகவும் தெரியவருகின்றது.

அரசாங்கங்கள், ஐக்கிய நாடுகள் முகவர் நிலையங்கள், சிவில் சமூகம் மற்றும் ஆர்வலர்கள் இந்த பிரச்சனையில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஒன்றுகூடி பல்வேறு திட்டங்களையும் முன்னெடுத்து வருகின்றனர்.

மேலும், இது அனைவருக்கும் பாதுகாப்பான உலகத்தை உருவாக்கும் முயற்சியில் முன்னணியாக த் திகழ்கின்ற சுகாதார பணியாளர்கள் மற்றும் சேவை வழங்குநர்களுக்கு நன்றி செலுத்துவதற்கு ஒரு வாய்ப்பாக அமையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெண்களுக்கு எதிரான வன்முறைகள் மற்றும் மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு இலங்கை ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.