
File Photo
கல்முனை கல்வி வலயத்திற்கு உட்பட்ட அனைத்து பாடசாலைகளும் நாளை முதல் அமுலுக்கு வரும் வகையில் மூடப்படுகின்றது.
ஒரு வார காலத்துக்கு குறித்த பாடசாலைகள் மூடப்படவுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநர் அநுராதா யஹம்பத் தெரிவித்துள்ளார்.
அத்துடன், பாடசாலை மீள திறக்கப்படும் திகதி விரைவில் அறிவிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிரதேசத்தில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதை அடுத்தே, இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, கொரோனா அச்சம் காரணமாக கண்டி நகரிலுள்ள 45 பாடசாலைகள் நேற்றைய தினம் மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.