May 5, 2025 17:13:51

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மாங்குளத்தில் தனியார் காணியொன்றில் வெடிப்பு சம்பவம்

முல்லைத்தீவு, மாங்குளம் கற்குவாரி பகுதியில் வெடிப்புச் சம்பவமொன்று இன்று இடம்பெற்றுள்ளது.

தனியார் காணியில் காணப்பட்ட வெடி பொருளொன்று வெடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வெடிப்பு சம்பவத்தை அடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸாரும், இராணுவத்தினரும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த வெடிப்பு சம்பவத்தினால் எவருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.