January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராக சரத் வீரசேகர பதவியேற்பு

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராக கலாநிதி சரத் வீரசேகர பதவியேற்றுள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ முன்னிலையில் அவர் இன்று பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.

மாகாண சபைகள் உள்ளுராட்சி மன்றங்கள் இராஜாங்க அமைச்சராக இருந்த கலாநிதி சரத் வீரசேகரவுக்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சு வழங்கப்பட்டுள்ளது.

அதேநேரம், அமைச்சர் சமல் ராஜபக்‌ஷ, மற்றுமொரு இராஜாங்க அமைச்சுப் பதவியொன்றுக்கும் பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.

நீர்பாசன அமைச்சரான சமல் ராஜபக்‌ஷ இன்றைய தினம் தேசிய பாதுகாப்பு, உள்நாட்டலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சராகவும் பதவிப் பிரமானம் செய்துகொண்டார்..

அண்மையில் ஜனாதிபதி கோட்டாயப ராஜபக்‌ஷ விசேட வர்த்தமானி அறிவித்தலொன்றை வெளியிட்டு, புதிய அமைச்சுப் பதவிகள் இரண்டை பிரகடனப்படுத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.