Photo: Facebook/ Wimal Weerawansa
வடக்கு மாகாணத்தில் கடந்த காலங்களில் மூடப்பட்ட தொழிற்சாலைகளை மீண்டும் திறப்பதற்கு நடவடிக்கையெடுக்கவுள்ளதாக கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
ஏறாவூர் பிரதேசத்தில் இடம்பெற்ற ஊடகவிலாளர் சந்திப்பொன்றிலேயே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
மூடப்பட்ட தொழிற்சாலைகளை திறப்பதன் மூலம் சுமார் 2,000 பேருக்கு வேலை வாய்ப்புக்களை வழங்க முடியுமாக இருக்கும் என்பதுடன், வடக்கு மாகாணத்தில் உள்ளவர்கள் எதிர்நோக்கும் வேலை இல்லா பிரச்சினைகளுக்கு தீர்வுகளைப் பெற்றுக் கொள்ள முடியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை வடக்கில் ஆடைத்தொழிற்சாலைளை அமைக்கும் திட்டங்களும் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.