May 5, 2025 16:40:01

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்தின் குற்றத் தடுப்புப் பிரிவுப் பொறுப்பதிகாரி திடீர் மரணம்

கொள்ளுப்பிட்டி

Photo: Facebook/ Kollupitiya Police

கொழும்பு, காலி முகத்திடலில் உடற் பயிற்சியில் ஈடுபட்டிருந்த கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்தின் குற்றத் தடுப்பு பிரிவுப் பொறுப்பதிகாரி திடீர் உடல் நலக்குறைவால் உயிரிழந்துள்ளார்.

இன்று காலை உடற் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது, பொறுப்பதிகாரிக்கு திடீர் சுகயீனம் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இரண்டு பிள்ளைகளின் தந்தையான அவர், மிக நீண்ட நாள்களாக இதய நோய் தொடர்பில் சிகிச்சைப் பெற்று வந்தவரென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரது உயிரிழப்புக்கான காரணம் தொடர்பில் மருத்துவப் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.