
இலங்கையில் மேலும் 2 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.
அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 96 ஆக அதிகரித்துள்ளது.
80 வயதுடைய ஆண் ஒருவர் மற்றும் 45 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்தார்.
மேலும் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றியவர்களின் எண்ணிக்கை 21 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
நேற்று 502 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய கொரோனாவின் மூன்றாவது அலை மூலம் இதுவரை 17 ஆயிரத்து 934 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.
இதையடுத்து மொத்தத் தொற்றாளர்களின் எண்ணிக்கை 21 ஆயிரத்து 469 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 15 ஆயிரத்து 447 பேர் குணமடைந்துள்ளனர். 5 ஆயிரத்து 928 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும் அரச தகவல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.