May 25, 2025 0:16:43

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”இலங்கையின் உள்ளக விவகாரங்களில் சர்வதேச தலையீடுகளுக்கு இடமளிக்க முடியாது” : அமைச்சர் ஜி.எல்.பீரிஸ்

File photo

இலங்கையின் உள்ளக விவகாரங்களில் சர்வதேச நாடுகள்  தலையீடுவதை தமது அரசாங்கம் விரும்பவில்லை என்று அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

நாட்டின் உரிமைகள் குறித்து தீர்மானிக்கும் அதிகாரம் தங்களுக்கே இருக்கின்றது   என்பதனாலேயே, ஜெனிவா பிரேரணையில் இருந்து வெளியேற முடிவு செய்ததாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று நடைபெற்ற வரவு செலவு திட்டத்தின் வெளிவிவகார அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஒரு நாடு இன்னொரு நாட்டின் உள்ளக விடயங்களில் தலையீடுகளை ஏற்படுத்த முடியாது என்பதில் தாம் உறுதியாக இருப்பதாக தெரிவித்துள்ள அமைச்சர், இதன்படி இலங்கை இராணுவத்தினர் மீதான குற்றச்சாட்டுகளை நிராகரிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை இராணுவத்தினர் போர்க் குற்றத்தை புரியவில்லை எனவும், சர்வதேச சட்டத்திற்கு உட்பட்டே இராணுவம் போர் புரிந்தது என்பதை சர்வதேச நிபுணர்கள் தெரிவித்துள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எவ்வாறாயினும் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்‌ஷ அரசாங்கத்திற்கு மக்கள் ஆணை கிடைத்துள்ளது. இதனை கொண்டு உள்ளக ரீதியில் உண்மைகளை கண்டறிய நடவடிக்கை எடுப்போம் என்றும் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.