
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் இன்று பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் அவர் இன்று ஆஜர்ப்படுத்தப்பட்ட போது பிணை வழங்கப்பட்டுள்ளது.
ஒரு இலட்சம் ரூபா காசுப் பிணையிலும், தலா 10 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளிலும் அவரை விடுதலை செய்யுமாறு நீதவான் பிரியந்த லியனகே உத்தரவிட்டுள்ளார்.
2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் அரச பணத்தை முறையற்ற விதத்தில் பயன்படுத்தி, இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ்கள் மூலம் புத்தளத்தில் இருக்கும் வாக்காளர்களை மன்னாருக்கு அழைத்துச் சென்றுள்ளதாக ரிஷாட் பதியுதீன் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தன.
இதனை அடிப்படையாக கொண்டு, பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கடந்த ஒக்டோபர் 19 ஆம் திகதி நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் தெஹிவளையில் மறைந்திருந்த போது கைதுசெய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.