
file photo: Ruwan Wijewardene/ Facebook
ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற ஆசனத்தை கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஏற்றுக்கொள்ள மறுத்தால், பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தனவை நாடாளுமன்றத்துக்கு அனுப்ப வேண்டும் என கட்சியின் உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற வெற்றிடத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துமாறு கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்த போதும், அவர் அதனை மறுத்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுகின்றது.
தேசிய பட்டியல் நாடாளுமன்ற ஆசனத்தை கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஏற்றுக்கொள்ள மறுத்தால், பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தனவை நாடாளுமன்றத்துக்கு அனுப்ப வேண்டும் என கட்சியின் சில உறுப்பினர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
கட்சியின் நாடாளுமன்ற தேசிய பட்டியல் விடயம் தொடர்பாக அடுத்த வாரம் இறுதித் தீர்மானமொன்று எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பொதுச் செயலாளர் பதவியில் இருந்து விலகுவதாக அகிலவிராஜ் காரியவசம் அனுப்பிய இராஜினாமா கடிதத்தையும் ரணில் விக்ரமசிங்க நிராகரித்துள்ளதாகத் தெரியவருகின்றது.