July 2, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஈஸ்டர் தாக்குதல்: 7ஆவது தடவையாக முன்னாள் ஜனாதிபதி விசாரணை

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் மீண்டும் ஆஜராகியுள்ளார்.

ஏழாவது தடவையாக இன்று முற்பகல் மைத்திரிபால ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ள நிலையில் அவரிடம் தாக்குதல் சம்பவம் தொடர்பான வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றது.

குறித்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்ற காலப்பகுதியில் ஜனாதிபதியாக இருந்த மைத்திரிபால வசமே பாதுகாப்பு அமைச்சு இருந்தது.

இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளில், பாதுகாப்பு அமைச்சு தனது பொறுப்புக்களில் இருந்து விலகியுள்ளதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியமளிக்கும் போது, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீது குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் வகையில் சாட்சியம் வழங்கியிருந்தார்.

எவ்வாறாயினும் அந்த குற்றச்சாட்டுகளை மைத்திரிபால சிறிசேன நிராகரித்திருந்ததுடன் அதில் உண்மையில்லை என்றும் குறிப்பிட்டு அறிக்கை வெளியிட்டார்.

பின்னர், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் கடந்த மாதம் 5 ஆம் திகதி முதல் தடவையாக ஆஜராகி சாட்சியமளித்திருந்தார்.