July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையின் சிறைச்சாலைகளில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் 717 ஆக அதிகரிப்பு

இலங்கையின் சிறைச்சாலைகளில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான கைதிகளின் எண்ணிக்கை 717 வரை அதிகரித்துள்ளதாக தெரியவருகின்றது.

வெலிக்கடை சிறைச்சாலையின் பெண்கள் பிரிவில் கொவிட்- 19 தொற்றுக்குள்ளான கைதிகள் அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்தே இந்தத் தொகை அதிகரித்துள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய தெரிவித்துள்ளார்.

இன்று கொரோனா தொற்றுக்குள்ளான 35 பெண் கைதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

வெலிக்கடை, பூஸ்ஸா மற்றும் போகம்பறை சிறைச்சாலைகளில் கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

புதிய கைதிகளை பூஸ்ஸா மற்றும் பழைய போகம்பறை சிறைச்சாலைகளில் அனுமதிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சிறைச்சாலைகளில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்கும், சுகாதார நடைமுறைகளை மேற்பார்வை செய்வதற்கும் 5 பொது சுகாதார பரிசோதகர்களை சுகாதார சேவைகள் பணிப்பாளர் சேவையில் ஈடுபடுத்தியுள்ளார்.

விடுதலை செய்யப்படும் கைதிகள் பி.சி.ஆர் பரிசோதனைகளைத் தொடர்ந்து வீரவிலை மற்றும் பல்லேகலை திறந்த சிறைச்சாலைகளில் கட்டாய தனிமைப்படுத்தலை மேற்கொண்ட பின்னரே சமூகத்துக்கு செல்ல அனுமதிக்கப்படுவதாகவும் துஷார உபுல்தெனிய சுட்டிக்காட்டியுள்ளார்.