பாடசாலை மாணவரொருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய வைத்தியர் கைதுசெய்யப்பட்டு, நுகேகொடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.
எர்ரவில தர்மபால வித்தியாலய மைதானத்தில் கிரிக்கெட் விளையாடிய மாணவன், பந்தை எடுக்க வைத்தியரின் வீட்டு வளவுக்குள் நுழைந்தபோதே, இந்த துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த பாடசாலை மாணவன், கொழும்பு தெற்கு, களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவத்தில் 17 வயது மாணவனின் வயிற்றில் காயம் ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வைத்தியரின் வீட்டு வளாகத்தில் மாணவன் பந்தை எடுக்க நுழைந்தபோது, ஏற்பட்ட வாக்குவாதத்திலேயே துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பண்ணிப்பிட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிச் சூடு நடத்திய வைத்தியரின் வாயு துப்பாக்கியை பொலிஸார் கைப்பற்றியதோடு இது தொடர்பான விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.