January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொழும்புக்கான விமானத்தைத் தவறவிட்ட அப்ரிடி

லங்கா பிரிமியர் லீக் இருபது 20 போட்டிகளில் கலந்துகொள்ள இலங்கைக்கு வர இருந்த பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் ஷஹீட் அப்ரிடி விமானத்தைத் தவறவிட்டதாகத் தெரிவித்துள்ளார்.

எல்பிஎல் போட்டித் தொடர் எதிர்வரும் 27 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில், அவர் இன்று இலங்கைக்கு வரவிருந்த நிலையிலேயே அவர் விமானத்தை தவறவிட்டுள்ளார்.

நாளைய தினம் இலங்கைக்கு வரவுள்ள அப்ரிடி தனது ட்விட்டர் பக்கத்தில் ‘கொழும்புக்கான விமானத்தை இன்று காலை தவறவிட்டேன். கவலைப்படத் தேவையில்லை, கோல் கிளேடியேட்டர்ஸ் அணியில் பங்கேற்க நான் விரைவில் வருவேன்’ என பதிவிட்டிருந்தார்.

ஏற்கனவே கோல் கிளேடியேட்டர்ஸ் அணியின் தலைவராக பாகிஸ்தானைச் சேர்ந்த சர்பராஸ் அகமது நியமிக்கப்பட்டிருந்தார்.

பாகிஸ்தான் அணி – நியூசிலாந்து டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதால் சர்பராஸ் அகமது எல்பிஎல் போட்டியிலிருந்து விலகினார். இந்நிலையில் ஷஹீட் அப்ரிடி அந்த அணியின் தலைவராக நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

எனினும், கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, இலங்கையில் அப்ரிடி தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்பதால், முதல் போட்டியையும் தவறவிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.