எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக குமாரதுங்க ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று இன்று இடம்பெற்றுள்ளது.
அண்மைக்கால அரசியல், சமூக மற்றும் பொருளாதார விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவலின் அச்சுறுத்தல் மற்றும் சவால்கள் தொடர்பாகவும் கவனம் செலுத்தப்பட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.
அதேபோன்று, இலங்கைக்குப் பொருத்தமான தேசிய சுற்றாடல் கொள்கையொன்று வகுக்கப்பட வேண்டியதன் தேவை குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
உலகம் எதிர்கொண்டுள்ள பருவகால மாற்றம் குறித்தும் இதன்போது கருத்துக்கள் பரிமாறப்பட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.