January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பிரசாந்தனின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டது

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூ.பிரசாந்தனின் விளக்கமறியல், டிசெம்பர் 07ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் நீதிபதி ஏ.சி.றிஸ்வான் முன்னிலையில் காணொளி ஊடாக இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளரும், கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினருமான பூபாலப்பிள்ளை பிரசாந்தன், கடந்த 9ஆம் திகதி குற்றப்புலனாய்வு துறையினரால் கைது செய்யப்பட்டார்.

2008ஆம் ஆண்டு ஆரையம்பதியில் இடம்பெற்ற இரட்டைப் படுகொலை தொடர்பில், சந்தேகத்தின் பேரில் ஏற்கெனவே கைது செய்யப்பட்டிருந்த அவர், பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில், வழக்கின் சாட்சியங்களை அச்சுறுத்திய குற்றச்சாட்டின் கீழ் சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஆலோசனைக்கு அமைய, பிரசாந்தன் மீண்டும் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.