October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பல்கலைக்கழக நுழைவில் அநீதியிழைக்கப்பட்ட மாணவர்களுக்கு நீதி கோரி கொழும்பில் ஆர்ப்பாட்டம்

சுதந்திர கல்விக்கான மாணவர் இயக்கம் இன்று கொழும்பில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொண்டுள்ளது.

2019 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் வெட்டுப்புள்ளிகளில் ஏற்பட்ட சிக்கலில் அநீதியிழைக்கப்பட்ட மாணவர்களுக்கு நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்று கோரியே, இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கொழும்பு, காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு, பல்கலைக்கழக நுழைவில் அநீதியிழைக்கப்பட்ட மாணவர்களும் இதில் கலந்துகொண்டுள்ளனர்.

கடந்த வருடம் உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகளின் வெட்டுப்புள்ளிகளில் சிக்கல்கள் ஏற்பட்டதாகவும், அதன் காரணமாக அதிகமான மாணவ, மாணவிகள் பல்கலைக்கழக வாய்ப்பை இழந்துள்ளதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மாணவர்களின் இந்தப் பிரச்சினையைக் காரணம் காட்டி, ஆட்சிக்கு வந்தவர்கள் இப்போது பிரச்சினைக்கு தீர்வு வழங்குவதில் பின்னிற்பதாகவும் குற்றம்சாட்டியுள்ளனர்.

அநீதியிழைக்கப்பட்ட மாணவர்களை பல்கலைக்கழகங்களுக்கு இணைத்துக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.