January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஐக்கிய தேசிய கட்சியின் செயலாளர் பதவியிலிருந்து அகிலவிராஜ் இராஜினாமா

file photo: Facebook/ Akila Viraj Kariyawasam

ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் பதவியை இராஜினாமாச் செய்வதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

கட்சியின் பொதுச் செயலாளர் பதவியை இராஜினாமா செய்வது குறித்து அவர் இன்று ஊடகங்களுக்கு செய்தி வெளியிட்டுள்ளார்.

கட்சி மறுசீரமைப்பு நடவடிக்கைகளின் போது, புதிய உறுப்பினர்களுக்கு இடம் கொடுக்க வேண்டியதன் அவசியம் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

2021 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்படவுள்ள கட்சி மறுசீரமைப்பு நடவடிக்கைககளின் போது, தலைமைத்துவம் உட்பட அனைத்து பதவிகளிலும் மாற்றங்கள் ஏற்பட வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.