Photo: Facebook/Basil Rajapaksa
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு விதிக்கபட்டிருந்த வெளிநாட்டு பயணத் தடையை கொழும்பு மேல் நீதிமன்றம் நீக்கியுள்ளது.
அத்துடன் இவருக்கு பிணை வழங்கப்பட்ட போது விதிக்கப்பட்டிருந்த நிபந்தனைகளில் ஒன்றான மூன்று மாதங்களுக்கு ஒருமுறை குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையும் நீதிமன்றத்தினால் நீக்கப்பட்டுள்ளது.
2015 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின்போது, திவிநெகும அபிவிருத்தி திணைக்களத்துக்கு சொந்தமான நிதியை முறைக்கேடாக பயன்படுத்தியதாக அவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பான வழக்கில் அவருக்கு வெளிநாட்டு பயணத்தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது அவரின் வெளிநாட்டு பயணத் தடையையும், மூன்று மாதத்த்திற்கு ஒரு தடவை குற்றப் புலனாய்வு பிரிவில் ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனைகளையும் நீக்குவதற்கு நீதிமன்றத்தினால் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதேவேளை இந்த வழக்கு விசாரணை நாளை மறுதினத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.