இலங்கைக்கு தென்கிழக்கே வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்க நிலை விருத்தியடையந்து எதிர்வரும் 48 மணித்தியாலங்களில் சூறாவளியாக மாறக் கூடிய சாத்தியம் அதிகமாக காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனால் நாட்டில் கடும் காற்றுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என்பதுடன் கடல் பிரதேசங்களில் கொந்தளிப்பு நிலைமை ஏற்படுமெனவும் அந்தத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
சூறாவளி வடமேல் திசையை நோக்கி நகரும் என்பதுடன் 24 ஆம் திகதி அது இலங்கையின் தென்கிழக்கு கடல் பிரதேசத்தை அண்மிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது கிழக்கு, வடக்கு, வடமேல் மாகாணங்களில் சில பிரதேசங்களில் 150 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழை பெய்யக் கூடுமெனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.
மேலும் புத்தளம் முதல் மன்னார், காங்கேசன்துறை, திருகோணமலை, மட்டக்களப்பு ஊடாக பொத்துவில் வரையில் கடல் பிரதேசங்கள் கொந்தளிப்பாக இருக்குமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் இது குறித்து அவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களை கேட்டுக்கொண்டுள்ளது.