January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சில பிரதேசங்கள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு

கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் சில பிரதேசங்களை தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பதற்கு கொவிட் தடுப்புக்கான செயலணி தீர்மானித்துள்ளது.

இதன்படி நாளை அதிகாலை 5 மணி முதல் கொழும்பு மாவட்டத்தில் பொரளை, வெல்லம்பிட்டிய, கோட்டை மற்றும் கொம்பனித்தெரு ஆகிய பொலிஸ் பிரிவுகளுக்கு உட்பட்ட பிரதேசங்கள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படவுள்ளதாக  இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அத்துடன் கம்பஹா மாவட்டத்தில் ஜா-எல மற்றும் கடவத்த பொலிஸ் பிரிவுகளுக்கு உட்பட்ட பிரதேசங்களும் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், கொழும்பு மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள மற்றைய 13 பொலிஸ் பிரிவுகளுக்கு உட்பட்ட பிரதேசங்களும், கம்பஹா மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள மற்றைய 5 பொலிஸ் பிரிவுகளுக்கு உட்பட்ட பிரதேசங்களும் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் என்றும் இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.