November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொழும்பில் போலி யாசகர்களை கைது செய்ய நடவடிக்கை

கொழும்பு மற்றும் அதனை அண்மித்த நகரங்களில் யாசகத்தில் ஈடுபடும் போலி யாசகர்களை கைது செய்வதற்காக விசேட நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளரும் பிரதிப்பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இதேவேளை வீதி சமிக்ஞைகளில் வாகனங்கள் நிற்கும் போது, யாசகத்தில் ஈடுபடுவர்களை கைது செய்ய நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நேற்று முதல் இந்த நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

யாசகத்தில் ஈடுபடுபவர்களில் பெரும்பாலானவர்கள் அதனை தமது வியாபாரமாகவே நடத்திச் செல்வதாகவும், உண்மையிலேயே வாழ்க்கைக்காக பிச்சை எடுப்பவர்கள் மிகக் குறைவே எனவும், குறிப்பாக கொழும்பில் யாசகத்தில் ஈடுபடுபவர்களில் 95 வீதமானவர்கள் போலி யாசகர்களே எனவும், அவர்களுக்கு சம்பளம் வழங்கி ஒரு சில நபர்கள் அவர்களை வழிநடத்துவதாக தெரியவந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனால் போலி யாசகர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், அத்துடன் வீதிச் சமிக்ஞைகளில் வாகன நெரிசல் ஏற்படும் வகையில் நடந்துகொள்ளும் யாசகர்கள், அவர்களுக்கு பணம் வழங்கும் வாகன சாரதிகள் அல்லது பயணிகள் தொடர்பாகவும் நடவடிக்கையெடுக்கப்படும் என்றும் பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.