இங்கிலாந்தின் ‘கொவிட் 19 பாதுகாப்பான நாடுகள்’ பட்டியலில் இலங்கையும் சேர்க்கப்பட்டுள்ளது.
அத்துடன் இஸ்ரேல், உருகுவே ஆகிய நாடுகளும் இந்தப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளன.
இங்கிலாந்தின் கொவிட் தடுப்புச் சட்டத்திற்கமைய வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படுவது அவசிமாகும்.
ஆனால் மேற்குறிப்பிட்ட நாடுகளில் இருந்து வருபவர்கள் சனிக்கிழமை முதல் தனிமைப்படுத்தப்படுத்தலுக்கு உட்பட வேண்டிய அவசியமில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் நமீபியா, ருவாண்டா, பொனெய்ர், வடக்கு மரியானா தீவுகள் மற்றும் அமெரிக்க வெர்ஜின் தீவுகள் ஆகியவற்றில் இருந்து இங்கிலாந்துக்கு வருபவர்களும் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட வேண்டியதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இந்த வாரத்தில் எந்த நாடுகளும் பாதுகாப்பான நாடுகள் பட்டியலில் இருந்து நீக்கப்படவில்லை என்று இங்கிலாந்து போக்குவரத்து செயலாளர் கிராண்ட் ஷாப்ஸ் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
Travel corridor update: ISRAEL, NAMIBIA, RWANDA, SRI LANKA, URUGUAY, BONAIRE, ST EUSTATIUS & SABA, THE NORTHERN MARIANA ISLANDS and THE US VIRGIN ISLANDS have been ADDED to the #TravelCorrdor list. pic.twitter.com/74fjsyf5Tt
— Rt Hon Grant Shapps MP (@grantshapps) November 19, 2020