
இலங்கையில் தமிழ் பேசும் மக்கள் செறிந்து வாழும் வடக்கு- கிழக்கு மாகாணங்கள் இடையே திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களை மேற்கொண்டு புதிய மாகாணம் ஒன்றை உருவாக்கும் முயற்சியில் அரசு ஈடுபட்டுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
திட்டமிட்ட குடியேற்றங்கள் மூலம் தமிழர் பாரம்பரிய பிரதேசங்களின் நிலத் தொடர்ச்சி இல்லாமல் செய்யப்பட்டு வடக்கு-கிழக்கு மாகாணங்கள் பிரிக்கப்படும் ஆபத்து உள்ளதாகவும் அவர் கூறினார்.
வடக்கு- கிழக்கு மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் தலைவர்கள் இந்த விடயத்தில் உரிய நடவடிக்கையில் இறங்க வேண்டும் என்றும் சுரேஷ் பிரேமச்சந்திரன் கேட்டுக்கொண்டார்.