April 17, 2025 16:16:43

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

“கைது செய்து சிறையில் அடைத்தாலும் மாவீரர்களை நினைவுகூர்வோம்”: சிவாஜிலிங்கம்

அரசு எப்படியான தடைகளை விதித்தாலும் ‘நவம்பர் 27 மாவீரர் தின நினைவேந்தலை’ நடத்தியே தீருவோம் என்று முன்னாள் மாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்று ஊடகவியலாளர் சந்திப்பை நடத்திய சிவாஜிலிங்கம்,உயிரிழந்தவர்களை நினைவுகூர்வதற்கு குடும்ப உறுப்பினர்களுக்கு உள்ள உரிமையை யாரும் மறுக்க முடியாது என்றும் கூறினார்.

மாவீரர் தின நிகழ்வுகளில் பெருந்திரளான மக்கள் கலந்துகொள்ள வேண்டும் என்றும், நினைவேந்தலை முன்னின்று நடத்தக்கூடிய அரசியல் தலைவர்களை கைதுசெய்து சிறையில் அடைத்தாலும் சிறைக்குள்ளும் தமது நினைவேந்தல் தொடரும் எனவும் சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.