ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாடாளுமன்றத்துக்கு இன்று திடீரென விஜயம் மேற்கொண்டார்.
வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான இரண்டாவது நாள் விவாதம் நாடாளுமன்றில் இடம்பெற்றுக்கொண்டிருந்த நிலையிலேயே அவர் அங்கு வந்துள்ளார்.
நாடாளுமன்றத்துக்கு வருகைதந்த ஜனாதிபதி சபைக்குள் வந்து தனக்குரிய ஆசனத்தில் அமர்ந்துகொண்டார். அவருக்கு அருகில் பிரதமர் மகிந்த ராஜபக்ஷவும் அமர்ந்திருந்தார்.
2021ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டம் கடந்த 17ஆம் திகதி நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்ட நிலையில், இரண்டாம் வாசிப்பு விவாதம் 4 நாட்களுக்கு இடம்பெறவுள்ளது.