பெறுமதி சேர் வரி (வற்) அதிகரிக்கப்பட்டதை தொடர்ந்து இலங்கையில் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அதிகரித்து வரும் நிலையில், இறக்குமதி செய்யப்படும் பால்மா விலையும் அதிகரிக்கப்படவுள்ளதாக பல்மா நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
இதன்படி, இறக்குமதி செய்யப்படும் 1 கிலோ கிராம் பால் மா பொதியின் விலை 75 ரூபாவினால் அதிகரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விலை அதிகரிப்புக்கமைய 400 கிராம் பால் மா பொதியின் விலை 30 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த வாரம் முதல் இந்த விலை அதிகரிப்பு அமுல்படுத்தப்படவுவுள்ளதாக பால்மா நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.