February 23, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அவுஸ்திரேலியாவில் பயிற்சிகளை ஆரம்பித்தது இந்திய அணி

photo: BCCI/ twitter

அவுஸ்திரேலியாவுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி வீரர்கள் இரண்டு நாள் ஓய்வுக்குப் பின்னர் சிட்னியில் பயிற்சிகளை ஆரம்பித்துள்ளனர்.

இந்திய அணி 3 இருபது-20, 3 ஒருநாள் மற்றும் 4 டெஸ்ட் போட்டிகளில் அவுஸ்திரேலியாவை எதிர்த்தாடுகிறது.

இதற்கான 25 பேர் கொண்ட இந்திய குழாம் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அவுஸ்திரேலியாவை சென்றடைந்தது.

ஓய்விலிருந்த அவர்களுக்கு முதற்கட்ட கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டதில் எவருக்கும் கொரோனா இல்லை என்பது உறுதிசெய்யப்பட்டது.

அடுத்து அவர்களுக்கான பயிற்சிஅனுமதியை அவுஸ்திரேலியா வழங்கியது.

இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் இன்று சிறு சிறு பயிற்சிகளில் ஈடுபட்டதாக இந்திய கிரிக்கெட் சபை தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளது.

எனினும், இந்திய அணி வீரர்கள் சிட்னியில் தங்கியிருக்கும் ஹோட்டலில் எதிர்வரும் 25 ஆம் திகதி வரை 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தலில் இருப்பார்கள்.

தொடரின் முதல் சர்வதேச ஒருநாள் ஆட்டம் எதிர்வரும் 27 ஆம் திகதி சிட்னியில் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.