January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

நியூஸிலாந்துக்கு எதிரான கிரிக்கெட் தொடர்; பாகிஸ்தான் அணியின் முக்கிய வீரர்கள் நீக்கம்

நியூஸிலாந்துக்கு கிரிக்கெட் விஜயம் செய்யவுள்ள பாகிஸ்தான் குழாத்தில் அசாத் ஷாபிக், மொஹமட் அமிர், சொஹைப் மாலிக் ஆகியோருக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை. புதுமுக வீரர்களுக்கு வாய்ப்பளித்ததால் குறித்த வீரர்கள் மூவரும் நீக்கப்பட்டுள்ளனர்.

பாகிஸ்தான் அணி எதிர்வரும் டிசம்பர் மாதம் நியூஸிலாந்துக்கு விஜயம் செய்து 3 சர்வதேச இருபது20, 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இதற்கான 35 வீரர்கள் கொண்ட பாகிஸ்தான் குழாம் இன்று அறிவிக்கப்பட்டது.

டெஸ்ட், சர்வதேச இருபது20 ஆகிய இரண்டு வகை கிரிக்கெட் போட்டிகளுக்குமான பாகிஸ்தான் அணியின் தலைவராக பாபர் அசாம் நியமிக்கப்பட்டுள்ளார். விக்கெட் காப்பாளரும், புதுமுக வீரரான மொஹமட் ரிஸ்வான் டெஸ்ட் குழாத்தில் இடம்பெற்றுள்ளார்.

அணியை கட்டியெழுப்புவதற்காக புதுமுக வீரர்களுக்கு வாய்ப்பளிக்க திட்டமிட்டதாக பாகிஸ்தான் அணியின் தலைமை பயிற்றுநரும், தெரிவுக் குழுவின் சிரேஷ்ட உறுப்பினருமான மிஸ்பா உல் ஹக் தெரிவித்துள்ளார்.