January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இந்திய- ஆஸி. கிரிக்கெட் தொடர்: 5 புதுமுக வீரர்கள் அறிமுகம்

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான அவுஸ்திரேலியா  அணியில்  ஐந்து புதுமுக வீரர்ககளுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

துடுப்பாட்ட வீரரான வில் புகோவ்ஸ்கி, சகலதுறை வீரர்களான கெமரன் கிரீன், மிச்செல் நெசர், வேகப் பந்துவீச்சாளரான ஷோன் அபொட், சுழல்பந்துவீச்சாளரான மிச்செல் ஸ்வெப்சன் ஆகியோரே அந்த ஐந்து வீரர்களாவர்.

இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் மூன்று ஒரு நாள் போட்டிகள் இம்மாதம் (27,29 டிசம்பர் 2) மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் (டிசம்பர் 4, 6, 8) விளையாடுகிறது.

இவர்கள் ஐந்து பேரும் இதுவரை டெஸ்ட் போட்டிகளில் விளையாடாத அனுபவமற்ற வீரர்களாவார்கள்.

என்றாலும், 22 வயதுடைய வில் புகோவ்ஸ்கி தன்சானியாவுக்கு எதிரான முதல்தர கிரிக்கெட் போட்டியில் இரட்டை சதமடித்துள்ளார்.

அதேபோன்று 21 வயதுடைய கெமரன் கிரீன் 4 முதல்தர போட்டிகளில் 76.60 எனும் துடுப்பாட்ட சராசரியைப் பெற்றுள்ளார்.

ஏனைய மூன்று வீரர்களான மிச்செல் நெசர், ஷோன் அபொட், மிச்செல் ஸ்வெப்சன் ஆகியோர் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் மாத்திரம் விளையாடிய அனுபவமுடைய வீரர்களாகவுள்ளனர்.

டிம் பெய்ன் தலைமையிலான அவுஸ்திரேலிய டெஸ்க் குழாத்தில் டேவிட் வோனர், ஜோ பேர்ன்ஸ், மார்னஸ் லபுசேன், ஸ்டீவன் ஸ்மித், ட்ரிவிஸ் ஹெட், மெத்திவ் வேட், பெட் கமின்ஸ், மிச்செல் ஸ்டார்க், ஜொஸ் ஹஸல்வூட், நதன் லியோன், ஜேம்ஸ் பெட்டடின்சன் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.