January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கால்பந்தாட்ட நடப்பு சாம்பியனுக்கு அதிர்ச்சியளித்த பின்லாந்து

உலக கால்பந்தாட்ட நடப்பு சாம்பியனான பிரான்ஸ் சர்வதேச மட்டத்திலான நட்பு போட்டியில் பின்லாந்திடம் அதிர்ச்சித் தோல்வியடைந்துள்ளது.

பாரிஸில் நடைபெற்று வரும் சர்வதேச அணிகளின் நட்பு கால்பந்தாட்ட போட்டியில் நடப்பு சாம்பியனான பிரான்ஸ், பின்லாந்துடன் மோதியது.

போட்டியின் முதல் அரையாட்டத்தில் ஆதிக்கம் செலுத்திய பின்லாந்து, 2 கோல்களைப் போட்டு முன்னிலையில் இருந்தது.

28 ஆவது நிமிடத்தில் மார்க்கஸ் போர்ஸும், 31 ஆவது நிமிடத்தில் ஒனி வலகரியும் பின்லாந்துக்காக கோலடித்துள்ளனர்.

போட்டியின் இரண்டாம் அரையாட்டத்தில் பிரான்ஸ் வீரர்கள் கோலடிக்க கடும் பிரயத்தனம் எடுத்த போதிலும், அந்த முயற்சிகளை பின்லாந்து வீரர்கள் முறியடித்துள்ளனர்.

இந்தப் போட்டியை 2-0 என்ற அடிப்படையில் கைப்பற்றிய பின்லாந்து, சர்வதேச கால்பந்தாட்ட அரங்கை மிரள வைத்துள்ளது.

சர்வதேச அணிகளின் கால்பந்தாட்டத் தரவரிசையில் பிரான்ஸ் இரண்டாமிடத்திலும், பின்லாந்து 55 ஆவது இடத்திலும் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

1960 ஆம் ஆண்டின் பின்னர் பின்லாந்து பிரான்ஸை வெற்றிகொண்ட முதல் சந்தர்ப்பமும் இதுவாகும்.