January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சிம்பாப்வேக்கு எதிரான 20-20 தொடரையும் கைப்பற்றியது பாகிஸ்தான்

சிம்பாப்வேக்கு எதிரான சர்வதேச இருபது 20 கிரிக்கெட் தொடரையும் பாகிஸ்தான் அணி கைப்பற்றியுள்ளது. தொடரின் மூன்றாவதும், இறுதியுமான ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 8 விக்கெட்டுகளால் வெற்றிபெற்று தொடரை 3-0 என கைப்பற்றியது.

ராவல்பிண்டியில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே அணி மிகவும் மந்தமாக செயற்பட்டு 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 129 ஓட்டங்களைப் பெற்றது.

அணித்தலைவர் சம்மு சிபாபா 31, டி திரிபானோ 28 ஓட்டங்களையும் அதிகபட்சமாகப் பெற்றனர்.

பாகிஸ்தான் அணி சார்பில் உஸ்மான் காதிர் 4 விக்கெட்டுகளையும், இமாட் வசிம் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

130 ஓட்டங்களை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 15.2 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு வெற்றி இலக்கை எட்டியது.

அப்துல் ஸாபிக் 41 ஓட்டங்களையும், குஸ்தில் ஸாஹா 36 ஓட்டங்களையும் பெற்று வெற்றியை உறுதிசெய்தனர்.

கடைசி ஆட்டத்தின் சிறப்பாட்டக்காரர், தொடரின் சிறந்த வீரர் ஆகிய விருதுகளை உஸ்மான் காதிர் தன்வசப்படுத்திக்கொண்டார்.