
இந்திய கிரிக்கெட் அணியில் விளையாட தமிழக வீரர் நடராஜனுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.
கிரிக்கெட் வீரர் நடராஜன் இந்திய அணிக்கு தேர்வாகியதை அடுத்து தமிழக முதலமைச்சர் மற்றும் எதிர்கட்சி தலைவர் உள்ளிட்ட பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்திய அணி நவம்பர் 27 முதல் 2021 ஜனவரி 19 ஆம் திகதி வரை அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது.இந்த தொடருக்கு தேர்வாகிய பல வீரர்கள் காயத்தால் அவதிப்படுவதை அடுத்து புதிய வீரர்களின் பட்டியலை பிசிசிஐ வெளியிட்டுள்ளது
அந்த கிரிக்கெட் வீரர்கள் பட்டியலில் தமிழகம் சேலத்தைச் சேர்ந்த நடராஜன் வேகப்பந்து வீச்சாளராக சேர்க்கப்பட்டுள்ளார்.