ஜேர்மனியில் நடைபெறும் பன்டெஸ்லிகா கால்பந்தாட்டத் தொடரில் பயேர்ன் மியூனிக் கழக அணி புள்ளிகள் பட்டியலில் மீண்டும் முன்னிலைப் பெற்றுள்ளது.
பொருஸியா டொட்மன்ட் கழக அணிக்கு எதிரான போட்டியில் வெற்றிபெற்றதன் மூலமே பயேர்ன் மியூனிக் அணி இந்த முன்னேற்றத்தை அடைந்துள்ளது.
பன்டெஸ்லிகா கால்பந்தாட்டத் தொடரில் சனிக்கிழமை நடைபெற்ற ஒரு போட்டியில் பயேர்ன் மியூனிக் மற்றும் பொருஸியா டொட்மன்ட் கழக அணிகள் விளையாடின.
இரண்டு அணிகளின் வீரர்களினதும் கோல் போடும் முயற்சிக்கு முதல் பாதியின் இறுதியில் பலன் கிடைத்தது.
பொருஸியா டொட்மன்ட் அணி சார்பாக ரெஸ் 45 ஆவது நிமிடத்திலும், பயேர்ன் அணி சார்பாக அலாபா உபாதைக்கான நேரத்திலும் கோலடித்தனர். அதற்கமைய முதல் பாதி ஆட்டம் 1-1 என சமநிலையில் முடிந்தது.
இரண்டாம் பாதி ஆரம்பமான உடனேயே லெவன்டொஸ்கி கோல் போட பயேர்ன் மியூனிக் அணி முன்னிலைப் பெற்றது.
- https://tamilavani.com/others/8380/
- https://tamilavani.com/sports/6834/
- https://tamilavani.com/sports/4254/
தோடர்ந்து 80 ஆவது நிமிடத்தில் சேன் கோலொன் போட்டார். அதன்படி பயேர்ன் மியூனிக் அணியின் கோல் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்தது.
பொருஸியா டொட்மன்ட் அணி வீரரான ஹாலன்ட் 83 ஆவது நிமிடத்தில் கோல் போட்டு சவால் விடுக்க முயற்சித்தார்.
எனினும், அதன்பின் ஒருவராலும் கோல் போட முடியவில்லை. இறுதியில் 3-2 எனும் கோல் கணக்கில் பயேர்ன் மியூனிக் அணி வெற்றிபெற்றது.
இதற்கமைய பன்டஸ்லிகா கால்பந்தாட்டத் தொடரில் பயேர்ன் மியூனிக் அணி 7 போட்டிகளில் 6 வெற்றிகளுடன் 18 புள்ளிகளைப் பெற்று முதலிடம் வகிக்கிறது.
பொருஸியா டொட்மன்ட் அணி 7 போட்டிகளில் 5 வெற்றிகளுடன் 10 புள்ளிகளைப் பெற்று மூன்றாமிடத்தில் உள்ளது.