September 17, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ரக்பி: நியூஸிலாந்துக்கு அதிர்ச்சியளித்த அவுஸ்திரேலியா!

(Photo: Wallabies/ Facebook)

ரக்பி விளையாட்டில் உலகப் பிரசித்திபெற்ற பலம் வாய்ந்த அணியான நியூஸிலாந்துக்கு அதிர்ச்சியளித்து வெற்றிபெற்ற அவுஸ்திரேலியா முழு ரக்பி உலகையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

அவுஸ்திரேலியாவுக்கு விஜயம் செய்துள்ள நியூஸிலாந்து ரக்பி அணி ஒரு போட்டியில் அவுஸ்திரேலியாவை எதிர்த்தாடியது.

இந்தப் போட்டியில் ஆரம்பம் முதலே சிறப்பாக விளையாடிய அவுஸ்திரேலிய அணி வீரர்கள் புள்ளிகளை ஈட்டி சவால் விடுத்தனர்.

போட்டியில் 24 – 22 எனும் புள்ளிகள் அடிப்படையில் அவுஸ்திரேலியா வெற்றி பெற்று அனைவரையும் பிரமிப்பில் ஆழ்த்தியது.

அவுஸ்திரேலியா பெற்ற 24 புள்ளிகளில் 2 ட்றைகள், 2 கோர்னர்கள், 4 பெனால்டிகள் என்பன அடங்கின. நியூஸிலாந்து 3 ட்றைகள், 2 கோர்னர்கள், ஒரு பெனால்டியுடன் 22 புள்ளிகளைப் பெற்றது.

சமீபத்தில் நடைபெற்ற பிலெடிஸ்கோல் கிண்ண ரக்பி தொடரில் அவுஸ்திரேலியாவை 43-5 எனும் புள்ளிகள் வித்தியாசத்தில் நியூஸிலாந்து வீழ்த்தியிருந்தது.

அதன் பின்னர் தற்போது அவுஸ்திரேலியா வெற்றிபெற்றிருப்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.