January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

20-20 தொடர்; சிம்பாப்வேயை வீழ்த்தியது பாகிஸ்தான்

சிம்பாப்வே அணிக்கு எதிரான சர்வதேச 20-20 கிரிக்கெட் தொடரையும் பாகிஸ்தான் அணி வெற்றியுடன் ஆரம்பித்துள்ளது.

பாகிஸ்தானுக்கு விஜயம் செய்துள்ள சிம்பாப்வே அணி ஒருநாள் தொடரை 2-1 என இழந்த நிலையில் 3 போட்டிகளை கொண்ட 20-20 தொடர் இன்று சனிக்கிழமை ஆரம்பமானது.

ராவல்பிண்டியில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே அணி முதல் ஓவரின் ஐந்தாவது பந்தில் முதல் விக்கெட்டை இழந்தது. சம்மு சிபாபா ஓட்டமின்றி ஆட்டமிழந்தார்.

பிரென்டன் டெய்லர் 20 ஓட்டங்களையும், ஷோன் வில்லியம்ஸ் 25 ஓட்டங்களையும், எல்டன் சிகும்புரா 21 ஓட்டங்களையும் பெற்று ஆறுதல் கொடுத்தனர். சிறப்பாக துடுப்பெடுத்தாடிய டபிள்யூ.மெத்வரே 70 ஓட்டங்களைப் பெற, சிம்பாப்வே அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 156 ஓட்டங்களைப் பெற்றது.

ஹாரிஸ் ராவுப், வஹாப் ரியாஷ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

157 ஓட்டங்களை நோக்கி களமிறங்கிய பாகிஸ்தான் அணியின் முதல் விக்கெட் 36 ஓட்டங்களுக்கு வீழ்த்தப்பட்டாலும் அணித்தலைவர் பாபர் அசாம் அதிரடியாக ஓட்டங்களைக் குவித்து வெற்றிக்கு வழிசெய்தார். 55 பந்துகளை எதிர்கொண்ட அவர் ஒரு சிக்ஸர், 9 பௌண்டரிகளுடன் 82 ஓட்டங்களைப் பெற்றார்.
மொஹமட் ஹாபிஸ் 36 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுக்க பாகிஸ்தான் அணி 18.5 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு வெற்றி இலக்கை அடைந்தது.

இந்த வெற்றியின் பிரகாரம்20-20 தொடரில் 1-0 என பாகிஸ்தான் அணி முன்னிலை பெற்றுள்ளது.