January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியில் ககிசோ ரபாடா

(Photo: Facebook/ Kagiso Rabada)

வேகப்பந்து வீச்சாளரான ககிசோ ரபாடா மீண்டும் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார்.

25 வயதுடைய அவர், கடந்த மார்ச் மாதம் இடுப்பில் ஏற்பட்ட உபாதை காரணமாக தென் ஆப்பிரிக்க அணியில் இருந்து நீக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில், ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட ககிசோ ரபாடாவுக்கு தென் ஆப்பிரிக்க அணியில் மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 27 ஆம் திகதி தென் ஆப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான  சர்வதேச இருபதுக்கு 20 போட்டித் தொடர் ஆரம்பமாகவுள்ளது.

அதன் பின்னர், மூன்று போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் தொடரும் நடைபெறவுள்ளதோடு, அதற்காக தென் ஆப்பிரிக்க அணியில் ரபாடா பெயரிடப்பட்டுள்ளார்.

தென் ஆப்பிரிக்கா இருபதுக்கு 20 அணியின் தலைவராக குயின்டன் டி காக் செயற்படுவதுடன், முன்னாள் அணித் தலைவரான பெப் டு பிளெசிஸியும் அணியில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.